பற்றுக பற்று அற்றவன் திருவடியை

பற்றுக பற்று அற்றவன் திருவடியை
                             rudrateswarar
                                                            ஓம் நமசிவாய
பற்றுக பற்று அற்றவன் திருவடியை
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்  ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை


திருகுறளில்  துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக இந்த பாடல் உள்ளது இப்பாடலை துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக எழுதுகிறோம் எனவே பற்று என்ற ஒட்டுதல் அறவே கூடாது என்று திருவள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையும் உதடுகள் ஒட்டாமல் எழுதியுள்ளார்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு 
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்   துறவு அதிகாரத்தில் பத்தாவது பாடலாக இந்த பாடல் உள்ளது இதை திருவள்ளுவர் எழுதும்போது பற்று வேண்டும் என்கிறார் எதன் மீது ? பற்றற்ற இறைவன் திருவடியை பற்ற வேண்டும் என்று அருள்கிறார் . அதற்காக அனைத்து வார்த்தைகளும் அழுத்தமாக உதடுகள் ஓட்டும் வண்ணம் எழுதியுள்ளார் .
இதிலிருந்தே எதைப் பற்றவேண்டும் என்று தெளிவாக தெரிகிறது . பற்றற்றவன் தாளை தவிர மற்ற பற்றுகள் துன்பம் விளைவிக்கும். எனவே அளவில்லா வற்றாத இன்பம் கிடைக்கும் வண்ணம் உலகப்பற்றுக்களை நீக்கி பற்றற்ற இறைவன் திருவடியினை பற்றுவோம், பிறவிப்பிணி நீங்கி ஆனந்தம் பெறுவோம்

                         போற்றி ஓம் நமசிவாய

இறைவனை நாம் எல்லா நாளும் எல்லா நேரமும் நினைக்க வேண்டும். எந்த நேரம் நினைத்தால் என்ன சொல்லி வாழ்த்தி நினைக்கலாம் என்று சில திருவாசக போற்றி திருஅகவல்களை தொகுத்துள்ளோம் . நம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அந்த செயல் திருவருள் துணையுடன் சிறப்பாக முடிய சிவசிவ என்று நம் நா உச்சரிக்க வேண்டும்.சம்பந்தர் மூர்த்தி சுவாமிகள் திருச்சாய்க்காடு தேவாரத்தில் நீ நாளும் நன்னெஞ்சே என்று அருளியுள்ளார் 


காலையில் உறங்கி  எழும்போது 

அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண்ணார் அமுதக் கடலே போற்றி


ஆலய கோபுரம் மற்றும் இறை தரிசனம் காணும்போது 


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 


உணவு உண்ணும்போது 


தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 


மன அச்சம் நீங்க 


அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி 

புத்துணர்ச்சி பெற 


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி 

உறங்க செல்லும் போது 

ஆடக மதுரை அரசே போற்றி 
கூடல் இலங்கு குருமணி போற்றி

                              திருச்சிற்றம்பலம் 


Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP