சிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?

 ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?

இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார் யார் அணியலாம் என்கிற கேள்வி பலருக்கு எழுகிறது.

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை..!

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை என போற்றப்படுகிறது. நவ ரத்தினங்களின் அரசன் என்றும் ருத்ராட்சத்தை குறிப்பிடுகிறார்கள்.

மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த ருத்ராட்சம், பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ருத்ராட்சத்தின் மகிமை பற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தெய்வீகத் தன்மை கொண்ட ருத்ராட்சம், நோய் தீர்க்கும் தன்மையையும் கொண்டதாகும்.

ருத்ராட்ச மர பழத்தில் இருந்து ருத்ராட்ச கொட்டை கிடைக்கிறது. இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், நேபாளம், ஜாவா தீவு என உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ருத்ராட்ச மரங்கள் வளர்கின்றன.


Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP