கல்லும் கடவுளும்

                            ஓம் நமசிவாய
கல்லும் கடவுளும்

மனிதப்பிறவி இறைவன் படைப்புகளிலேயே
மிக உன்னதமான பிறவி ஆனால் அதற்கேற் றவாறு நடக்கின்றோமா என்றால் அது தான் இல்லை . ஏன் இயலவில்லை ? ஏன் அதற்குமுயலவில்லை ?  காரணம் ஆன்மாவைப் பற்றியுள்ள ஆணவம் அறியாமை எனும் இருள்  உதாரணமாக நமது கண்ணுக்கு பார்க்கும் திறன் உள்ளது என்று நம்புகிறோம் ஆனால் பார்க்கும் திறன் பெற்ற கண்ணால் ஏன் இரவில் பார்க்க முடியவில்லை , காட்டு விக்கும் ஒளி இல்லை அதனால் நம்மால் இருளில் பார்க்க இயலவில்லை
அது போலவே தான் உயிர்கள் அறிவித்தால் தான் எந்த ஒரு விசயத்தையும் அறியும் ஆனால் அப்படி அறிவித்தாலும் நாம் அறிகிறோமா? என்றால் இல்லை
பகுத்தறிவு , சிந்தனாவாதி என்று மெய்யறிவு புலப்படாமல் போகிறது
ஒரு கல்லானது சிலை என்று ஆகி விட்டால் அது வழிபடத்தக்கதாக ஆகிறது . காரணம் சிற்பி உருவம் கொடுக்க சிவாச்சாரியார் ஆவாகனம் செய்ய அந்த கற்சிலையானது  கடவுளாகிறது அப்போ மனிதன் ஏன் கடவுளாக வழிபடத்தக்க வகையில் மாறுவ தில்லை .ஏனெனில் சிற்பி செதுக்கும் போது கல் எந்த எதிர்ப்பையும் காண்பிப்பதில்லை ஆனால் மனிதன் சிந்திக்கிறேன் பேர்வழி என்று பல எதிர்ப்புகளை காண்பிக்கிறான் அது மிகவும் கஷ்டமான செயலாக தோன்றுகிறது
நாம் மாடிப்படி ஏற மிகவும் சிரமப்படுகிறோம் ஆனால் இறங்குவதற்கு அவ்வளவு சிரமம் இருப்பதில்லை அதுபோல மனிதன் அடுத்த படிநிலைக்கு மாற சிரமம் இருக்கும் ஆனால் அதை கடந்துவிட்டால் எல்லையில்லா ஆனந்தம் பெறலாம் என்பதை ஏன் உணர்வ தில்லை இறை சிந்தனையை ஊட்டுவிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது அப்பொழுது அவர்கள் பகுத்தறிவு என்ற பெயரில் கேட்கும் கேள்விகளும் சிந்தனைகளும் மிகவும் கேவலமானவை பாவம் எது புண்ணியம் எது என்பதைக்கூட சராசரியாக அறியவில்லை

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே



 மாணிக்கவாசகர் சுவாமிகள் நம் உயிரைப் பற்றியுள்ள ஆணவமலம் நீங்கினால் நம் வினைகள் நீங்கி நாமும் சிவமாகலாம் அந்த நெறியை அறியாதவர்கள் மூர்க்கர்கள் என்றும் அந்த நெறியை அறியவும் அறிவிக்கவும் அந்த இறைவனால் மட்டுமே முடியும் அதற்குரிய பக்தி நெறியை  தேடி நாம் ஓரடி சென்றால் இறைவன் நம்மை நோக்கி பத்தடி வருவார் என்பது பகவான் ராமகிருஷ்ணர் வாக்கு

ஒன்றுகண் டீர்உல குக்கு ஒரு தெய்வமும்ஒன்றுகண்டீர்உல குக்கு உயி ராவதும்நன்றுகண் டீர்இன் நமச்சிவா யப்பழம்தின்றுகண் டேற்கு இது தித்தித்த வாறே.

  உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.                                                                                                              திருமூலர்  
   கல் கடவுளாகும் போது மனிதனும் கடவுளாக முடியும் நாம் அதற்கு முயற்சி செய்தால் நாமும் வழிபடும் பொருளாவோம்


                           போற்றி ஓம் நமசிவாய


                              திருச்சிற்றம்பலம் 

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP